முகத்தை ஸ்கேன் செய்தாலே போதும்... கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி..!
அபுதாபியில் கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பேஷியல் ஸ்கேனர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் சட்டவிரோத காடழிப்பை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் உத்தரவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கையெழுத்திட்டுள்ளார்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வந்தன. 2012 வரை சட்டவிரோத காடழிப்பு, தீவைத்தலுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பொறுப்பேற்ற பின் காடழிப்பு என்பது சர்வ சாதாரணமாக மாறி விட்டது.
அதிக விவசாயம், சுரங்கத் தொழில் ஆகியவை நாட்டின் வறுமையைப் போக்கும் என்பதால் காடழிப்பு நியாயம் என அவர் விளக்கம் அளித்தார்.இந்தநிலையில் அமேசான் சட்டவிரோத காடழிப்பிற்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பிரேசிலுக்கு எச்சரிக்கை விடுத்தன. இந்தநிலையில், சட்டவிரோத காடழிப்பு அபராத உயர்வில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கையெழுத்திட்டுள்ளார்.
2028-ம் ஆண்டுக்குள் சட்டவிரோத காடழிப்பு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற ஐநா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக போல்சனரோ எடுத்த முதல் உறுதியான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் 6 நாட்களுக்குள் தேர்தலை அறிவிக்காவிட்டால் அரசுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடர்வேன் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டார். தடுப்புகளை மீறி தலைநகருக்குள் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்த முயன்றதால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஆதரவாளர்களிடம் தெரிவித்த இம்ரான் கான், அரசு 6 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்துள்ளார்.
முன்னதாக ஆளும் கட்சியை சாடிய அவர், ஆட்சியை தக்க வைத்து கொள்ள எதிர்கட்சியினர் மீது ரெய்டு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்திரமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்காவில், தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றுக்குள் கடந்த செவ்வாய் கிழமை நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 சிறுவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
நடப்பாண்டு தொடர்ந்து 8வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் அங்குள்ள பெர்க்னர் உயர்நிலை பள்ளி அருகே அதே பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக நேற்று கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரது வாகனத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமேசான் சட்டவிரோத காடழிப்பை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் உத்தரவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கையெழுத்திட்டுள்ளார்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வந்தன. 2012 வரை சட்டவிரோத காடழிப்பு, தீவைத்தலுக்கு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பொறுப்பேற்ற பின் காடழிப்பு என்பது சர்வ சாதாரணமாக மாறி விட்டது. அதிக விவசாயம், சுரங்கத் தொழில் ஆகியவை நாட்டின் வறுமையைப் போக்கும் என்பதால் காடழிப்பு நியாயம் என அவர் விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் அமேசான் சட்டவிரோத காடழிப்பிற்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பிரேசிலுக்கு எச்சரிக்கை விடுத்தன.
இந்தநிலையில், சட்டவிரோத காடழிப்பு அபராத உயர்வில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கையெழுத்திட்டுள்ளார். 2028-ம் ஆண்டுக்குள் சட்டவிரோத காடழிப்பு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற ஐநா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக போல்சனரோ எடுத்த முதல் உறுதியான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான் அரசின் உத்தரவுக்கு ஆண் பத்திரிகையாளர்கள் நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசு அறிவித்துள்ளது.
தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உள்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் ஆப்கானில் எதிர்ப்பை மீறி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி தொலைக்காட்சிகளில் தோன்றினர். முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மறைத்தப்படி தொலைக்காட்சிகளில் தோன்றி தொகுத்து வழங்கினர்.