ஒரு உடல் உறுப்புக்கு பதில் மற்றொரு உடல் உறுப்பு...கல்லீரல் கொடுத்து விட்டு சிறுநீரகம் பெற்ற 19 வயது சிறுமி!!

தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக 19 வயதான சிறுமி மருத்துவ வரலாற்றில் மிக முக்கியமான அறுவை சிகிச்சைக்கு தானகவே ஏற்பாடு செய்து அதனை எதிர்கொண்டுள்ளார்.

ஒரு உடல் உறுப்புக்கு பதில் மற்றொரு உடல் உறுப்பு...கல்லீரல் கொடுத்து விட்டு சிறுநீரகம் பெற்ற 19 வயது சிறுமி!!

அலியானா என்ற 19 வயதான சிறுமி ஒரு மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஒரு உடல் உறுப்புக்கு பதில் மற்றொரு உடல் உறுப்பை மாற்றிக் கொள்ளும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதை பற்றி முதல் முறையாக விசாரித்துள்ளார்.

மேலும் இதனை பற்றி கூறிய சிறுமி நான் கண் விழித்து பார்த்த போது என் தாய் எவ்வாறு உள்ளார்.அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுற்றதா என்பதை கேட்டு அறிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.மேலும் அந்த சிறுமி நான் என்னை பற்றி கவலைகொள்ளவில்லை நான் அனுபவித்து வரும் வலியிலிருந்து விடுபடுவதில் மட்டுமே நோக்கமாக இருந்ததாக கூறினார்.அறுவை சிகிச்சை நடைப்பெற்று முடிந்ததை கேட்ட பின்பு தான் தன்னால் சுவாசிக்க முடிந்ததாக கூறியுள்ளார்.

அலியானா குறிப்பிட்டு சொல்லும் பொழுது தன்னையும் தன் தாயோடும் சேர்த்து அறுவை சிகிச்சை பட்டியலில் தனது இரு சகோதரிகளும் இடம் பெற்றிருந்ததாக கூறினார்.இந்த அறுவை சிகிச்சையில் அலியானவின் உடல் உறுப்பை ஒரு சகோதரிக்கும் மற்றொரு சகோதரியின் உடல் உறுப்பான சிறுநீரகத்தை தாய்க்கும் மாற்றி வைக்கும் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரிவித்தார்.

தனது இரு நண்பர்களும் உடல் உறுப்பு தானம் செய்ததால் குடும்பத்தில் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக கூறினார்.அலியான தன் தாய் எரொசலினை சிறுநீரக டயாலிசிஸ்  காரணமாக முன்கூட்டியே இறப்பதிலிருந்து அறிமுகமில்லாத ஒரு நபர் சிறுநீரகத்தை அளித்து உயிரை காப்பாற்றியுள்ளார்.சிறுநீரகத்தை மட்டுமே உயிரோடு வாழும் ஒரு நபர் மற்றவர்களுக்கு நன்கொடையாக வழங்க முடியும் எனவும் "மற்ற உடல் உறுப்புகளைப் போல் இல்லாமல், யாரோ ஒரு நபர், தான் விரும்பும் வேறு யாரோ ஒருவருக்கு சிறுநீரகத்தைக் கொடுத்து, அவர்கள் உயிரைப் காக்க முடியும்" என விவரிக்கிறார்.

இந்த மாதிரியான உறுப்பு பரிமாற்றங்கள் எல்லா நாடுகளிலும் இன்னும் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக ஜெர்மனியைக் கூறலாம், அங்கு உடல் உறுப்பை நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே தானமாகக் கொடுக்க முடியும்.ஆனால் அலியானாவால் தன் சிறுநீரகத்தை தன் தாய்க்கு கொடுக்க முடியவில்லை. காரணம், அவர் தாய்க்கு இருக்கும் சிறுநீரகப் பிரச்சனை பரம்பரையாக வழி வழியாக வருவதாக இருக்கலாம் என மருத்துவர்கள் அஞ்சினர். எனவே அலியானாவுக்கும் சிறுநீரகப் பிரச்சனை இருக்கலாம் என்று கருதினர்.

அலியானா தான் கண்டுபிடித்த சாத்தியக் கூறை செயல்படுத்த,  மருத்துவமனைகளை அழைத்து பேசத் தொடங்கினார். தன்னுடைய ஒரு பகுதி கல்லீரலுக்கு பதிலாக, தன் தாய்க்கு ஒரு சிறுநீரகத்தைக் பெற்று பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமா என்று தேடத் தொடங்கியுள்ளார்.தான் கூறுவதை சில மருத்துவமனைகளால் புரிந்து கொள்ள முடியவில்லை என அலியானா கூறுகிறார். "நான் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் சில மருத்துவமனைகள், என் தொலைபேசி அழைப்பை பிணவறையோடு இணைத்தனர்"கடைசியாக, அலியானா எதிர்பார்த்த பணிக்குச் சரியான மருத்துவர் ஒருவர் கிடைத்தார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ராபர்ட்ஸ் என்கிற அறுவை சிகிச்சை நிபுணர் அவர்.19 வயது இளம் பெண் ஒருவர் கூறுகிறார் என அவர் என் யோசனையைப் புறந்தள்ளவில்லை.

மருத்துவமனையின் உதவியோடு, அலியானா மற்றும் அவரது தாயோடு ஒத்துப் போகும் சகோதரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் ஒரு சகோதரி, அலியானாவிடமிருந்து ஒரு பகுதி கல்லீரலையும், மற்றொரு சகோதரியிடமிருந்து ஒரு புதிய சிறுநீரகத்தையும் பெறுவர் என ஏற்பாடு செய்யப்பட்டது.அலியானாவுக்கு இந்த அறுவை சிகிச்சையில் எந்த வருத்தமும் இல்லை. "மக்கள் உறுப்பு தானம் செய்யாததற்கு, உறுப்பு தானத்தைச் சுற்றியுள்ள பயம் காரணமாக மேற்கொள்வதில்லை என்று நான் கருதுகிறேன் " என்கிறார்.