70 ஆண்டு கால வரலாறு.. துயில் கொள்ள சென்றது.. கணவருக்கு அருகிலேயே..!

மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..!

70 ஆண்டு கால வரலாறு.. துயில் கொள்ள சென்றது.. கணவருக்கு அருகிலேயே..!

ம்றைந்த இங்கிலாந்து ராணி:

இங்கிலாந்தில் நீண்ட காலம் பதவி வகித்த ராணி 2-ம் எலிசபெத் உடல்நலக் குறைவால் கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 

இறுதி மரியாதை:

இதனைத் தொடர்ந்து, ராணியின் உடலை நல்லடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக ராணியின் உடல் ராணுவ அணிவகுப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் திரளாக காத்திருந்த மக்கள் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். இந்த இறுதி மரியாதையில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். 

சிறப்பு பிராத்தனை:

ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, லண்டன் மாநகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வழியாக பாரம்பரிய முறைப்படி குதிரை பூட்டப்பட்ட வண்டியில் வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்து செல்லப்பட்டது. பின்னர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ராணியின் கிரீடம் முன்வைக்கப்பட்டு பிராத்தனை பாடல் இசைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மன்னர் சார்லஸ் உட்பட ராணியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

கணவருக்கு அருகே:

வின்ட்சர் கோட்டையில் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தின் கீழ் உள்ள ராயல் வால்ட்டில், ராணியின் கணவரான இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே ராணியின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.