நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சையை ஒளிபரப்பு செய்த 7 பேர் - லண்டனில் கைது!!

நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்த ஒரு கூட்டத்தைச் சேர்ந்த ஏழு பேர் லண்டனில் கைது செய்யப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சையை ஒளிபரப்பு செய்த 7 பேர் - லண்டனில் கைது!!

2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானைச் சேர்ந்த Mao Sugiyama என்பவர் தனது ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அதை சமைத்து பரிமாற இருப்பதாக விளம்பரம் செய்தார்.அதற்காக 800 பவுண்டுகள் கட்டணமும் நிர்ணயித்திருந்தார் அவர்.

அவரது விளம்பரத்தைக் கண்ட சுமார் 70 பேர் அந்த விருந்து நிகழ்ச்சிக்காக டோக்கியோவில் திரண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐந்து பேர் மட்டுமே அதனை உண்டதாகவும் Sugiyama தன் கைப்பட சமைத்து விருந்தினர்களுக்கு வழங்கியுள்ளார். இதன் பின்னதாக காவல் துறையினர் அவரை கைது செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.

தற்போது ஒரு கூட்டம் லண்டனில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில், நேரலையில் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளது. அந்த அறுவை சிகிச்சையை நேரலையில் பார்க்க ஒரு கூட்டம் பணம் கட்டி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்து அதில் ஆறு பேரினை மட்டும் ஜாமீனில் விட்டதாகச் சொல்கின்றனர்.