ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள நாடு திரும்பிய 66,224 உக்ரைனியர்கள்!! அடுத்து என்ன மூவ்?

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள 66,224 உக்ரைனியர்கள் நாடு திரும்பியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள நாடு திரும்பிய 66,224 உக்ரைனியர்கள்!! அடுத்து என்ன மூவ்?

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் நிறைய உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. ரஷ்யா படை உக்ரைன் நாட்டின் முக்கிய இடங்களை கைப்பற்ற தீவிர செயல்பட்டு வருகிறது.

போரில் ஆயுதம் ஏந்துமாறு பொதுமக்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார். இதையடுத்து ராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்சி ரெஜ்னிகோவ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்து 66,224 உக்ரைனியர்கள் நாடு திரும்பி உள்ளனர் என கூறினார். 

உக்ரைன் நாட்டு மக்கள் தாமாக முன்வந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இல்லாமல் தொடர்ந்து 10 நாட்களாக உக்ரைன் போரை எதிர்கொண்டு வருகிறது.