உக்ரைன் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவில் இணைப்பு...புதின் கூறியது என்ன?

உக்ரைன் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவில் இணைப்பு...புதின் கூறியது என்ன?

மேற்குலக நாடுகளின் நூற்றாண்டு கால காலனித்துவம், அடிமை வர்த்தகம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்தல் ஆகிய செயல்கள் ரஷ்யாவிடம் எடுபடாது என்று அதிபர் விளாதிமிர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பகுதிகளை கைப்பற்றிய ரஷ்யா:

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா, உக்ரைன் பகுதிகளான டொனட்ஸ்க், லுகான்ஸ்க், ஸபோரிஸிஸியா மற்றும் கெர்சான் மண்டலங்களை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க இருப்பதாகவும், அதற்கான வாக்கெடுப்புகளும் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுடன் இணைவதற்கு பலர் இணக்கம் காட்டினர். 

கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி:

இதையடுத்து, உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அதிபர் புதின், இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்குலக நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த  விரும்புவதாக குறிப்பிட்டார். ஆனால், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என்றும் பொருளாதாரத் தடைகளை ரஷ்யா துணிவுடன் எதிர்கொள்ளும் என்றும் கூறினார். 

இதையும் படிக்க: இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

புதின் எச்சரிக்கை:

தொடர்ந்து பேசிய அவர், இனி இணைக்கப்பட்ட பகுதிகள் மீது நடத்தப்படும் தாக்குதலானது ரஷ்யா மீதான நேரடித் தாக்குதலாக கருதப்படும் என்றும், எல்லைகளைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்றும் எச்சரித்தார். அணு ஆயுதத் தாக்குதல் குறித்துப் பேசிய அவர், உலகில் இரண்டு முறை அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா. ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களை அணு ஆயுதங்களால் அழித்து, ஒரு முன்னுதாரணத்தை கொடுத்துள்ளது என்று அமெரிக்காவை சாடினார்.