தாய்க்கு தெரியாமல் 31 பர்கரை ஆர்டர் செய்து மிரள வைத்த 2 வயது குழந்தை!!

மகன் கையில் இருந்த செல்போனை வாங்கி பார்த்த பொழுது 31 பர்கர்களை ஆர்டர் செய்திருப்பது தெரிய வந்தது. 

தாய்க்கு தெரியாமல் 31 பர்கரை ஆர்டர் செய்து மிரள வைத்த 2 வயது குழந்தை!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவருக்கு இரண்டு வயதில் மகன் உள்ளான். இவன் தாயின் செல்போனை வாங்கிக்கொண்டு விளையாடியுள்ளான். அப்போது செல்போனின் உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் 31 சீஸ் பர்கர்களை ஆர்டர் செய்துள்ளான். 

சிறிது நேரத்தில் அவன் ஆர்டர் செய்து இருந்த சீஸ் பர்கர்களை ஊழியர் கெல்சி வீட்டுக்கு டெலிவரி செய்வதற்காக எடுத்து வந்துள்ளான். இதையடுத்து தான் பர்கர் ஆர்டர் செய்யவில்லையே என திகைத்த குழந்தையின் தாயார் செல்போனை எடுத்து பார்க்கையில் 31 பர்கர் ஆர்டர் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

அதன் பின்னதாக யாருக்கெனும் விருப்பம் இருப்பின் பர்கரை இலவசமாக தருகிறேன். எனது மகன் எப்படி ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்து இருக்கிறான். அவ்வப்போது இச்சம்பவம் மேலும் நிகழாமல் இருக்க செல்போனையும் செயலியையும் தங்கள் மகனிடம் இருந்து மறைத்து வையுங்கள் என கூறி சென்றிருக்கிறார் டெலிவரி ஊழியர். 

இது குறித்து குழந்தையின் தாயார் தெரிவிப்பதாவது எனது மகன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான் என நினைத்தேன். ஆனால் அவன் பர்கர்களை ஆர்டர் செய்து உள்ளான் என்பதை இப்போது தான் அறிகிறேன் என்றார்.