உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு!!

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்க உள்ளதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளன.

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி - ஜி7 நாடுகள் அறிவிப்பு!!

இது குறித்து ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 3 மாதங்களுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உக்ரைன் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தேவையான நிதி, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.