கணவரை விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த மனைவி!!! போட்டி போட்டு வாங்க வந்த 12 பெண்கள்!!  

ரிட்டன்- எக்ஸ்சேஞ்ச் இல்லை என அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை ஏலத்தில்  விற்க முடி வு செய்த நிலையில் அதனை விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரமானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கணவரை விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த மனைவி!!! போட்டி போட்டு வாங்க வந்த 12 பெண்கள்!!  

அயர்லாந்தை சேர்ந்தவர் ஜான், இவரது மனைவி  லிண்டா மெக் அலிஸ்டர். இந்த தம்பதிகளுக்கு  4 மற்றும் 6 வயதில் மகன்கள் உள்ளனர். இதனிடையில் லிண்டா திடீரென தனது கணவரை ஏலத்தில் விற்க முடிவு செய்து ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இதையடுத்து, அவருடைய கணவரை வாங்க 12 பெண்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

கணவர், மீன் பிடிக்க சென்ற நேரத்தில் இந்த பெண்மணி இத்தகைய விளம்பரத்தை இணையத்தில் பதிவிட்டது குறிபிடத்தக்கது. ஜான் எனது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37.  மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர்,  இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக உணவு வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில  பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த  விற்பனை இறுதியானது. என்று, அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தார

விளையாட்டாக அவர், இந்த ஏல போஸ்டினை போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜானை வாங்க முயற்சி செய்துள்ளனராம்.பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வேடிக்கையாக சிரித்து கடந்து சென்றதாக லிண்டா கூறியுள்ளார்.