ஆன்லைன் விளையாட்டால் 11 வயது சிறுவன் தற்கொலை..

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளர்து.

ஆன்லைன் விளையாட்டால் 11 வயது சிறுவன் தற்கொலை..

மத்திய பிரதேசம் போபாலில் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாக இருந்து வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்காக சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என மத்திய பிரதேசத்தின் உள்துறை மந்திரியான நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனான சூரியன்ஷ் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளான்.இந்த ஆன்லைன் விளையாட்டிற்காக பெற்றோருக்கு தெரியாமல் 6 ஆயிரம் செலவழித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதனை தெரிந்து கொண்ட சிறுவனின் பெற்றோர்கள் அந்த விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் தனது உறவினர் சிறுவன் ஆயுஷுடன் வீட்டின் மேல் அறையில் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.அவ்வப்போது ஆயுஷ் சூரியன்ஷை தனியாக விட்டுவிட்டு கீழே வந்ததாக தெரிகிறது.சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்க்கையில் சூரியன்ஷ் கயிற்றில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளான்.இதையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச் சிறுவனின் தற்கொலையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.