உலகம்
பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய நேபாள பிரதமர்...
இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக 5வது முறையாக ஷேர் பகதூர் தியூபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றதை அடுத்து, பிரதமர் பொறுப்பினை தக்க வைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் வெற்றிப்பெற்ற ஷேர் பகதூர் தியூபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து டிவிட் செய்திருந்த தியூபா, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த தங்களுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.