துணிக்கடை பொம்மையின் விக்கை (Wig) திருடிய இளைஞர்... சிசிடிவி காட்சிகள் வைரல்!!

துணிக்கடை பொம்மையின் விக்கை (Wig) திருடிய இளைஞர்... சிசிடிவி காட்சிகள் வைரல்!!

சேலத்தில் துணிக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்ட பொம்மையின் மீது இருந்த விக்கை திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சி வெகுவாக பரவி வருகிறது.

சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் ஜவுளி விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் முன்பு பொம்மை நிறுத்தி வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அப்பொழுது, அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் பொம்மையின் மீது அமைக்கப்பட்டு இருந்த தலைமுடி விக்கை தூக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து ஓட்டமெடுத்தார். அதனை ஏன் எடுத்துச் சென்றார் என காண்பவர்களும் காண்பவர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில், அந்த வேடிக்கையான காட்சி, சாக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்பொழுது, அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.  

இதைக் கண்ட சிலர், இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் சிறுவர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில், ரீல்ஸ் போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. அதனால், எளிதில் ட்ரெண்ட் ஆவதற்கான வழிமுறைகளில், இது போன்ற செயல்களில் எஈடுபடுவதும் ஒன்றாகும். எனவே, ட்ரெண்ட் ஆகா வேண்டும் என்னும் ஆசையில், இது போல செய்து வீடியோ எடுத்திருக்கலாம் என பேசிக்கொள்கின்றனர்.

இதையும் படிக்க || ஏடிஎம் கார்டை கொடுத்து உதவி கேட்ட பெண்ணிடம், தந்திரமாக பண மோசடி செய்த திருடன்!