எங்கள் காடு எங்கே ஜக்கி.? கேள்வி கேட்கும் ஒன்றிய உயிரினங்கள் ..! இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டாக்.!

எங்கள் காடு எங்கே ஜக்கி.? கேள்வி கேட்கும் ஒன்றிய உயிரினங்கள் ..! இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டாக்.!

கோவை ஈஷா மையத்தின் ஜக்கி வாசுதேவை விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஸ்டாக் இந்திய அளவில் பரவி வருகிறது.

கோவையில் ஜக்கி வாசுதேவ் என்பவர் ஈஷா என்ற பெயரில் ஆன்மிக மையத்தை அமைத்தார். அதற்க்காக வனப்பகுதிகளை ஆக்கிரமைப்பு செய்ததாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஒன்றிய உயிரினங்கள் என்ற பெயரில் மாடு,டைனோசர், பாம்பு போன்ற விலங்குகள் பெயரில் ட்விட்டரில் பலவேறு கணக்குகள் தொடங்கப்பட்டன.  அவற்றில் பதியும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ஒன்றிய உயிரினங்கள் வாழ்ந்த காடுகளை ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமித்துவிட்டார் என்று சொல்லி எங்கள் காடு எங்கே ஜக்கி என்ற அர்த்தத்தில் #காடு_எங்கடா_ஜக்கி என்ற ஹேஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேல் அந்த ஹேஸ்டாக் பகிரப்பட்டு வருகிறது.