பூரணபூல் நதியில் மூழ்கிய நபரைத் தண்ணீரில் இறங்கிக் காப்பாற்றிய காவலர்; வைரல் வீடியோ:

பூரணபூல் நதியில் மூழ்கிய நபரைத் தண்ணீரில் இறங்கிக் காப்பாற்றிய காவலர்; வைரல் வீடியோ:

ஹைதராபாத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. சற்று நின்ற மழை, கடந்த திங்கள்கிழமை இரவு மீண்டும் நகரை புரட்டிப் போட்டது. இதனால், நகரைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. இதனால் ஹைதராபாத் நகரின் வழியாக செல்லும் முசி கால்வாய் நிரம்பி வழிகிறது. 

இதனைத் தொடர்ந்து, மூசி ஆற்றில் மூழ்கிய நபரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்துவிட்டு எதைப் பற்றியும் கவலைப் படாமல், காவலர் சீருடையிலேயே மூசியில் குதித்தார். நீரில் மூழ்கியவரைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு கரையை அடைந்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோவை, தெலங்கானா காவல் துறை, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த புதன்கிழமை மாலை வெளியிட்டது.  தண்ணீரில் தத்தளித்தவரைக் காப்பாற்றிய இவர்தான் நிஜ வாழ்க்கை ஹீரோ என்று கூறி, அந்த் அகாவலர் குறித்த விவரங்களையும் வெளியிட்டது. தண்ணீரில் மூழ்கித் தத்தளித்த அந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய காவலர், நகரில் உள்ள மங்கல்ஹாட் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பணிபுரியும் ராம்பாபு எனக் கூறப்படுகிறது.

தெலங்கனாவில் நடக்கும் தொடர் மழையில், இவர் செய்த காரியம், பலரது கவனத்தையும் ஈர்த்து வருவதோடு, காவலர் ராம் பாபு, அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். மேலும், இந்த வீடியோ த்ற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.