ஐ லவ் யூ: சொல்வது ஒரு நாய்க்குட்டி .. நம்ப முடியலையா?

ஐ லவ் யூ:  சொல்வது ஒரு நாய்க்குட்டி .. நம்ப முடியலையா?

அமெரிக்காவின் வாஷிங்டனில் நாய் ஒன்று பேசும் நிகழ்வு காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக நாம் பேசுவதற்கு நாய்கள் குரைப்பதையே பதிலாக தருவது வழக்கம். ஆனால் வாஷிண்டனில் நாய் ஒன்று பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பன்னி (Bunny) என பெயர்கொண்ட நாய்  ஒன்று அதன் உரிமையாளரிடம் ஆங்கிலத்தில் ஒரு சில வார்த்தைகளில் பேசுகிறது.

மேலும், உரிமையாளர் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்கள் பதில் அளிப்பது போலவே அந்த நாய் பதிலளிப்பது வியக்கவைத்துள்ளது. பேச்சு வராத குழந்தைகளுக்கு வார்த்தைகளை பயிற்றுவிக்கும் முறை மூலம், தனது நாயுக்கும் சில வார்த்தைகளை சொல்லிக்கொடுத்துள்ளனர்

அதன் உரிமையாளர். இதன் மூலம் எளிதாக வார்த்தைகளை கற்றுக்கொண்ட அந்த நாய் குட்டி, தற்போது 92 ஆங்கில வார்த்தைகளை பேசுகிறது. மேலும் தனது உரிமையாளரை ஐ லவ் யூ என நாய்க்குட்டி சொல்லும் போது அனைவரும் மெய்மறந்து நிற்கின்றனர்