என் தலைவரே கைதாகிட்டாரு; இன்னுமாயா 10ரூ கூடுதலா கேக்கறீங்க?

என் தலைவரே கைதாகிட்டாரு; இன்னுமாயா 10ரூ கூடுதலா கேக்கறீங்க?

ஈரோடு: தலைவர் கைதான பிறகும் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என மதுபிரியர் கூறும் காணொளி வைரலாகி வருகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் தொடந்து 8 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய முன் தினம் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், மதுபிரியர் ஒருவர் மது வாங்கிவிட்டு அதற்கான பணம் கொடுக்கும் பொழுது, ஊழியர் கூடுதலாக 10ரூ கேட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த மதுபிரியர், என் தலைவரே கைதாகிவிட்டார். இன்னுமா ரூ 10 கூடுதலாக வசூலிக்கிறீர்கள். மாமே தலைவர் கைதான துக்கத்தில் தான் சரக்கு அடிக்கிறேன் என நகிச்சுவை செய்துகொண்டு பணம் கொடுத்து மதுவை வாங்கி செல்கிறார். தற்போது இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிக்க: தூத்துக்குடியில் அதிகளவில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்!