எஜமானிக்கு காரை தள்ள உதவிய வளர்ப்பு நாய்.. வைரல் வீடியோ

ஸ்காட்லாந்தில், வெள்ளத்தில் சிக்கிய காரினை தனது எஜமானியுடன் வளர்ப்பு நாய் சேர்ந்து தள்ளிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

எஜமானிக்கு காரை தள்ள உதவிய வளர்ப்பு நாய்.. வைரல் வீடியோ

 ஸ்காட்லாந்தில் அண்மையில் இடைவிடாது பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி, சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்தநிலையில் கிளாஸ்கோ நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், வெள்ளத்தில் சிக்கிய தனது காரினை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார்.

இதற்கென அவர் தனது காரினை தள்ளிக்கொண்டிருந்தபோது, இதனை கவனித்தபடி , வெள்ளத்தில் நீந்தி வந்த அவரது வளர்ப்பு நாய், தனது முன் இரு பாதங்களையும் காரில் ஒற்றியபடி காரை தள்ள உதவியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பல ஆயிரக்கணக்கானோர் செல்லப்பிராணியின் இந்த செயலை வியந்து பாராட்டியுள்ளனர்.