கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் தோனியின் கேராஜ்!

கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் தோனியின் கேராஜ்!

நட்சத்திர கிரிக்கேட் வீரர் மகேந்திர சிங் தோனியின் இரு சக்கர வாகனங்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ஒரு, இரு சக்கர வாகன பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது எந்த அளவுக்கு என்பதை முன்னால் கிரிக்கேட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள வீடியோ உணர்த்துகிறது. 

அந்த வீடியோவில் தான் வாங்கிய பல்வேறு விதமான இரு சக்கர வாகனங்களை தனது வீட்டின் கேராஜில் நிறுத்தி வைத்துள்ளார். வின்டேஜ் காலத்து வாகனங்கள் முதல் சமீபத்தில் அறிமுகமான வாகனங்கள் வரை தோனியின் கேராஜில் இடம் புடித்துள்ளன.

தோனியின் கேராஜை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் பார்வையிட்டுள்ளார். அதனை ஒரு வீடியோவாக பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில்," இந்த வாகனங்கள் எல்லாம் தோனியின் அற்புதமான சேகரிப்பு. வாகனங்கள் மீது அளவற்ற ஈர்ப்பு வைத்திருப்பவர்கள் மட்டுமே, இவ்வளவு வாகனங்களை சேகரித்து வைக்க முடியும். அவரது மோகத்தை கண்டு வியப்படைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

வெங்கடேஷ் பிரசாத் பகிர்ந்துள்ள இந்த காட்சி, இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் காட்சி அரையை போல், காண்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || இனி த்ரெட்ஸிலும் DM's பண்ணலாம்?