ஆசை ஆசையாக வாங்கிய ஸ்கூட்டி...நம்பர் பிளேட்டில் செக்ஸ் வார்த்தை... மனமுடைந்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய புதிய இருசக்கர வாகனத்துக்கு SEX என்ற வார்த்தையுடன் பதிவு எண் கிடைத்துள்ளதால் அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆசை ஆசையாக வாங்கிய ஸ்கூட்டி...நம்பர் பிளேட்டில் செக்ஸ் வார்த்தை... மனமுடைந்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

டெல்லியை சேர்ந்த ஃபேஷன் டிசைனிங் படிக்கும் மாணவிக்கு அவரது தந்தை தீபாவளி பரிசாக இருசக்கரவாகனத்தை வாங்கிக்கொடுத்துள்ளார். அந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ள பதிவு எண்ணை பார்த்து அக்கம்பக்கத்தினரின் கேலியால்  வீட்டு வாசலையே தாண்ட முடியத நிலையில் இருக்கிறார்.  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்பட்ட நம்பர் பிளேட்டில் SEX என்று குறிக்கப்பட்ட ஆங்கில வார்த்தைதான் அந்த பெண் வருத்தப்பட காரணமாக அமைந்துள்ளது.

டெல்லியில் பதிவு செய்யப்படும் வாகனத்தில் முதலில் வரும் DL எனும் 2 எழுத்துக்கள் டெல்லி மாநிலத்தை குறிக்கிறது. பின்னர் வரும் 2 எண்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மாவட்டத்தை குறிக்கும்.அதன் பின்னர் வரும் எழுத்துக்களில் முதல் எழுத்து C என்று இருந்தால் அது காரையும் S என்று இருந்தால் அது இருசக்கர வாகனத்தையும் குறிக்கும். இப்போது டெல்லியில் இருசக்கர வாகனத்தை பதிவு செய்யும்போது இருசக்கரவாகனத்தை குறிக்கும் S என்ற எழுத்தும் இப்போது புழக்கத்தில் உள்ள சீரிஸாக EX பதிவு செய்யப்படுகிறது. இதன்காரணமாக அந்தப்பெண்ணுக்கு DL 3 SEX ----  என்ற நம்பர் கிடைத்துள்ளது.

அந்த மாணவி தான் வசிக்கும் பகுதியில் இருந்து தினமும் சிரமம்பட்டு நொய்டாவில் இருக்கும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். ஒருமாதம் தனது தந்தையிடம் அடம்பிடித்து இந்த ஸ்கூட்டியை வாங்கியுள்ளார். என் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்கள் இந்த நம்பர் ப்ளேட்டை பார்த்தை மோசமான கமெண்ட்களை வீசுகின்றனர். வார்த்தைகளால் கொடுமைப்படுத்துகின்றனர் என அந்த மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணின் தந்தை வண்டியை வாங்கிய டீலரிடம் சென்று நம்பர் பிளேட்டை மாற்றித்தருமாறு கேட்டுள்ளார்.  உங்க பொண்ணு வண்டியில மட்டுமாங்க இந்த எழுத்து இருக்கு டெல்லியில ஆயிரக்கணக்கான வண்டியில இந்த எழுத்துதான் இருக்கு. நம்பர் ஆன்லைன்ல வந்ததால இதனை மாற்ற முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் அந்த பெண் இருசக்கர வாகனத்தை விற்க முடிவுசெய்துள்ளார்.