கடனை திருப்பி கேட்ட பெண்ணை உதைத்த ஆட்டோ ஓட்டுனர்: வீடியோ வைரல்!

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உதைத்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடனை திருப்பி கேட்ட பெண்ணை உதைத்த ஆட்டோ ஓட்டுனர்: வீடியோ வைரல்!
Published on
Updated on
1 min read

ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உதைத்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடா அருகேயுள்ள மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் கோவர்த்தினி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த  ஆட்டோ டிரைவரான கோபிகிருஷ்ணாவுக்கு 3 லட்சம் ரூபாய் பணத்தை வேறொருவரிடம் இருந்து வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார். 2 ஆண்டுகளாகியும், கடனையும் திருப்பி கொடுக்காமல், வட்டியும் கட்டாமல் இருந்து வந்த கோபிகிருஷ்ணாவிடம் வட்டியும் முதலையும் திருப்பி கொடுக்க சொல்லி கோவர்தினி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபி, ஆட்டோவில் இருந்தபடியே கோவர்த்தினியை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.

இதுகுறித்த புகாரின்  அடிப்படையில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com