பள்ளி சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்து பீடி பிடிக்க வைத்த இளைஞர்கள்...

பள்ளி சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்து பீடி பிடிக்க வைத்த இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளி சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்து பீடி பிடிக்க வைத்த இளைஞர்கள்...

பெங்களூருவில் பள்ளி சிறுவர்களை அடித்து சித்திரவதை செய்து பீடி பிடிக்க வைத்த இளைஞர்களின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் தேவ சந்திரா வார்டு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் விளையாட சென்ற போது, அங்கிருந்த கொடிய மனம் பதை்த இளைஞர்கள் சிலர் சிறுவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து, பீடி புகைக்கும் படி கூறி  தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும், சிறுவர்களை அடித்ததாகவும் புகார் கூறப்படுகிது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு  பதிவு  செய்த போலீசார் விரைந்து சென்று  கொடிய  செயலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்..