இமயமலை உச்சியில் தேசிய கீதத்தை பாடி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திய விங் கமாண்டர்..!

இமயமலை உச்சியில் தேசிய கீதத்தை பாடி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திய விங் கமாண்டர்..!

இமயமலை உச்சத்தை தொட்ட விமானப்படை அதிகாரி, தேசிய கீதத்தை பாடி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளார்.

75வது சுதந்திர தினத்தின் அம்ரித் மகோத்சவை முன்னிட்டு, இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றும் விக்ராந்த் உனியால், கடந்த 21ம் தேதி இமயமலையில் மலையேற்ற பயிற்சியை தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி மலை உச்சியை அடைந்த அவர், தேசிய கொடியை நாட்டி,  தேசிய கீதத்தையும் பாடியுள்ளார். இந்தநிலையில் இந்த வீடியோவை பதிவிட்ட உதாம்பூர் விமானப்படை தளம், தேசிய கீதம் மூலம் அவர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.