இப்போ என்ன பண்ணுவ..!!!காலிஸ்தானியர் முன்னிலையில் ஒற்றுமையாக தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள்!!

இப்போ என்ன பண்ணுவ..!!!காலிஸ்தானியர் முன்னிலையில் ஒற்றுமையாக தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள்!!

கனடாவின் மிசிசாகா நகரில் தீபாவளி விருந்தின் போது இந்திய வம்சாவளியினருக்கும் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்க உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதல் தகவல்:

மால்டனில் உள்ள கோர்வே மற்றும் எட்யூட் ஆகிய இடங்களில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 400 முதல் 500 பேர் முதலில் சண்டையிட்டதாக செய்திகள் வந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.

வைரலான வீடியோ:

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், மிசிசாகாவில் நடந்த தீபாவளி விருந்தில் இரண்டு குழுக்கள் காணப்படுகிறது.  அதில் ஒரு குழு மூவர்ணக் கொடியை பிடித்திருப்பதையும், மற்றொரு குழு காலிஸ்தான் கொடியை பிடித்திருப்பதையும் காண முடிகிறது.  இந்திய வம்சாவளியினர் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட போது காலிஸ்தான் கொடியை பிடித்தப்படி ஒரு குழுவினர் இந்திய கொடியை பலவந்தமாக பிடுங்கி கீழேயிட்டு அதை காலால் மிதிப்பது தெரிகிறது.

இப்போ என்ன பண்ணுவ..!!#காலிஸ்தான்| #இந்தியா| #கனடா| #தீபாவளிகொண்டாட்டம்| #அமைதியானபதிலடி| pic. twitter.com/BgG5cgCeZS

— Malaimurasu TV (@MalaimurasuTv) October 26, 2022

ஒன்றைணைந்த இந்தியர்கள்:

இந்த வீடியோ பகிரப்பட்ட சில நிமிடங்களில் மேலும் பல இந்திய வம்சாவளியினர் இணைந்து எவ்வித கலவரத்திலும் ஈடுபடாமல் ஒற்றுமையாக வெடி வெடித்தும் இந்திய கொடியை கையிலேந்தியும் காலிஸ்தான் பிரிவினைவாத சீக்கியர்களுக்கு முன்னே தீபாவளியை மிக சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.  அமைதியான முறையில் சிறப்பாக பிரச்சினையை கையாண்ட இந்தியர்களின் இந்த தீபாவளி கொண்டாட்ட வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

காலிஸ்தான் தனி அரசு கோரிக்கை:

கனடாவில் கடந்த சில மாதங்களாக தனி காலிஸ்தானி அரசை உருவாக்குவதற்கு அதன் ஆதரவாளர்கள் தலைமையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. காலிஸ்தானி அரசின் ஆதரவாளர்கள் தலைநகர் டொராண்டோ உட்பட பல கனேடிய மாகாணங்களில் உள்ள இந்து கோவில்களை சேதப்படுத்துவதிலும் ஈடுப்பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே அவர்கள் சுவாமிநாராயண் கோவிலை சிதைத்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஓவைசியின் பிரதமர் விருப்பமும் பாஜகவின் கிண்டல் நிறைந்த பதிலும்..!!!