என்ன ஸ்டைல்லா பைக் ஓட்டுராரு? வாங்க தம்பி தோப்புக்கரணம் போட்டுட்டு.. ரூ.4,000 ஃபைன் கட்டுங்க..!

ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த காவல்துறை..!

என்ன ஸ்டைல்லா பைக் ஓட்டுராரு? வாங்க தம்பி தோப்புக்கரணம் போட்டுட்டு.. ரூ.4,000 ஃபைன் கட்டுங்க..!

சாகசம் காட்டும் இளைஞர்கள்:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் இளைஞர்கள் நட்ட நடு சாலையில், சாகசத்தில் ஈடுபடுவதாக நினைத்து, வாகனங்களை சரியாக ஓட்டாமல் தங்களது ஸ்டைலில் விதிமுறைகளை மீறி ஓட்டுவது காரணமாக அமைந்து விடுகிறது. 

ஸ்டைலாக சென்ற இளைஞர்:

அந்த வகையில், சட்டீஸ்கரின் ராய்ப்பூர் நக்லரில் தலைகவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தை, ஒரு புறம் காலிட்டு அமர்ந்து, ஒரே ஒரு கையால் இளைஞர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். இதனைக் கண்ட போலீசார் அவரை அலேக்காக நிறுத்தியுள்ளனர். 

தோப்புகரணம் தண்டனை:

சாகசம் செய்த ஒருவரை பிடித்த காவல் துறையினர், அவருக்கு ரூ.4,000 அபராதம் விகித்தனர். மேலும் அவரை தோப்புகரணம் போட சொல்லி, அந்த வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.