கடவுளே புயல் வேகத்துல போகிட்டு இருக்கோம் குறுக்க தண்ணி லாரி வந்துட கூடாது.. துரத்திய தெருநாய்கள்.. தலைதெறித்து ஓடிய இளைஞர்கள்.!

தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு - கேரள நீதிமன்றம்

கடவுளே புயல் வேகத்துல போகிட்டு இருக்கோம் குறுக்க தண்ணி லாரி வந்துட கூடாது.. துரத்திய தெருநாய்கள்.. தலைதெறித்து ஓடிய இளைஞர்கள்.!

வளர்ப்பு பிராணிகள்:

சில சமயங்களில் வீட்டில் ஒரு வளர்ப்பு பிராணி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் வரும். அதிலும் இந்த காலத்தில் நிச்சயம் ஒருவரது வீட்டில் ஒரு நாயோ அல்லது பூனையோ வளர்ப்பு பிராணியாக இருந்தால் தான் அவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள் என்ற அளவுக்கு ஆகிவிட்டது. 

தெருக்களில் திரியும் பிராணிகள்:

அப்படியிருக்க, வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளில் ஆண் நாய்கள், பூனைகளை மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஒருவேளை பெண் பிராணிகள் இருந்தால் அவை டசன் கணக்கில் குட்டிகளை போடும் என்பதாலும், அதனை பாதுகாக்க முடியாது என்பதாலும் ஆண் பிராணிகள் தான் அதிகம் விற்பனையும் ஆகும். அவ்வாறு விற்பனை ஆகாத பிராணிகள், அல்லது விலை போகாத பிராணிகள் அனைத்துமே தெருக்களில் தான் திரியும். 

அட்டாக் செய்யும் நாய்கள்:

அப்படி தெருக்களில் திரியும் பிராணிகளை வளர்ப்பது யாருடைய தனிப்பட்ட கடமையும் இல்லை. ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது 2 முதல் 4 நாய்கள் அங்கும், இங்கும் உலா வந்து கொண்டிருக்கும். சாலையில் புதிதாக வருபவர்களையோ அல்லது வண்டியில் செல்பவர்களையோ துரத்துவதும், கடித்து வைப்பதுமாக இருக்கும். 

உணவளிப்பவர்கள் தான் பொறுப்பு:

அந்த வீதியில் இருப்பவர்கள் இந்த தெரு நாய்களுக்கு உணவளித்து வருவர். பல நேரங்களில் பலருக்கும் இந்த தெரு நாய்களின் செயலால் கோபமும், காயமும் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு அந்த தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள் தான் என சமீபத்தில் கேரளாவில் ஒரு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

துரத்திய நாய்கள், ஓடிய இளைஞர்கள்:

இந்த நிலையில், கேரளாவில் தெரு நாய்களிடம் சிக்கி தலைதெறித்து ஓடிய இளைஞர்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னூர் பகுதியில் 2 இளைஞர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இருவரையும் வெறி கொண்டு துரத்த, தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள், ஒரு வீட்டினுள் புகுந்து கதவை பூட்டியதால் அவைகளிடம் இருந்து தப்பித்தனர். 

இரவு நேரத்தில் அட்டாக்:

அதேபகுதியில் இரவு நேரத்தில் தனியாக ஒருவர் நடந்து வந்த போது, அவரையும் சுற்றி வளைத்து குரைக்க ஆரம்பித்தன அந்த நாய்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செய்வதறியாது அங்கிருந்து தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளது.