நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரமணி குறித்து தரக்குறைவாக பேசும் தலைமை ஆசிரியர் ஆடியோ வைரல்...

பாடப்புத்தம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரமணி குறித்து தரக்குறைவாக பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரமணி குறித்து தரக்குறைவாக பேசும்  தலைமை ஆசிரியர் ஆடியோ வைரல்...

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெமிலி வட்டார கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 89 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் நெமிலி அடுத்த அரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு மாலை 5 மணிக்கு மேல் புத்தகம் ஏற்றி சென்ற வாகனம் சென்றுள்ளது. அப்போது தலைமையாசிரியை பர்வீன் பானு பள்ளியை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ் தலைமையாசிரியை பர்வீன் பானுவிடம் நேரில் இருந்த புத்தகங்களை இறக்க முடியாதா என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒன்றரை ஆண்டுகளாக பணியே செய்யாமல் ஊதிய பெறும்போது ஒருநாள் காலதாமதமாக வீட்டிற்கு சென்றால் என்ன என கேட்டுள்ளார்.

இது குறித்து தலைமையாசிரியை பர்வீன் பானு, மஞ்சம்பாடி ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சிவராஜ்யிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சிவராஜ் வட்டார கல்வி அலுவலர் சம்பத்குமாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மற்றொரு வட்டார கல்வி அலுவலரான ஜெயராஜை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரமணி குறித்து அவதூறாக உரையாற்றியுள்ளார். இந்நிலையில்  இந்த  ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜ், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.