ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த விராட்-அனுஷ்கா தம்பதி...வைரலாகும் ஸ்டோரி...

விராட்-அனுஷ்கா தம்பதி இருவரும் தங்கள் குழந்தையின் முகத்தை வெளியிடாமல் இருந்த ஊடகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த விராட்-அனுஷ்கா தம்பதி...வைரலாகும் ஸ்டோரி...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஊடங்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சியாக தலைமையேற்று விளையாடி வருகிறார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கடந்த 2017-ம் ஆண்டு பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து விராட்-அனுஷ்கா தம்பதிக்கு  பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு வாமிகா என பெயரிட்டுள்ள கோலி - அனுஷ்கா தம்பதி இதுவரை அவர்கள் குழந்தையின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை இதுவரையிலும் வெளியிடவில்லை. 

 சமீபத்தில்  டெஸ்ட் கிரிக்கெட்  போட்டிக்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த ஊடகங்களிடம் தனது மகளின் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று விராட் கேட்டுக் கொண்டார். அதேபோல் எந்த ஊடகங்ளும்  அவர்களின் குழந்தை "வாமிகா " படத்தை வெளியிடவில்லை.

இந்நிலையில், விராட்-அனுஷ்கா தம்பதி இருவரும் தங்கள் குழந்தையின் முகத்தை வெளியிடாமல் இருந்த ஊடகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தங்கள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், " வாமிகாவின் படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடாததற்காக அனைத்து  ஊடக சகோதரத்துவத்திற்கு நாங்கள் நெஞ்சார்ந்த  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையைத் தேடுகிறோம். மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலக்கி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். 

எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். படங்களை வெளியிடாமல் இருந்ததற்காக ரசிகர் மன்றங்களுக்கும் இணைய மக்களுக்கும் சிறப்பு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.