பள்ளி மொட்டை மாடியில் குரங்குகள் கொடியேற்றும் வைரல் வீடியோ..!

பள்ளி மொட்டை மாடியில் குரங்குகள் கொடியேற்றும் வைரல் வீடியோ..!

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி, தற்போது பல வகையான பதிவுகளும் வாழ்த்துகளும் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், ஒரு வீடியோவும் தற்போது படு வைரலாகி, அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.

ஒரு பள்ளியில் மொட்டைமாடியில், இரண்டு குரங்குகள், தேசியக்கொடியை பறக்க விட்டன. மூவர்ண கொடியைச் சுற்றி வைத்த கயிறு பிரித்து, பூக்கள் கீழே விழ, அந்த குரங்குகள் கொடியைக் காற்றில் கம்பீரமாக பறக்க விடுகின்றன.

இதனை அங்கிருந்த மக்கள் அனைவரும் பார்த்து ரசித்து, அந்த குரங்குகளுக்கு சத்தம் போட்டு உற்சாகப்படுத்தினர். கொடியை ஏற்றிய குரங்கு சுற்றித் திரியும் போது, ​​மற்ற குரங்கு தப்பி ஓடுகிறது.

2017ம் ஆண்டு, இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தன்று இணையத்தில் வைரலான இந்த வீடியோ, ஹரியானாவின் அம்பாலா பகுதியில் எடுக்கப்பட்டது. ஐந்தாண்டுகள் கழித்து இன்று மீண்டும் இந்த விடியோ, பலராலும் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.