நேரலையில் ஆணை அறைந்த பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளர்; வைரல் வீடியோ!

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், நேரலையில், ஆண் ஒருவரை அரைந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அவரைப் பலரும் கேள்வி எழுப்பி வடுகின்றனர்.

நேரலையில் ஆணை அறைந்த பாகிஸ்தானிய பெண் பத்திரிக்கையாளர்; வைரல் வீடியோ!

தொலைக்காட்சிக்கு செய்திகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அந்த பெண் நிருபர் தன்னைச் சுற்ரி இருந்த பொதுமக்களில் ஒரு இளைஞரின் கண்ணத்தில் அரைந்த வீடியோவானது, ட்விட்டரில் வெளியாகி, தற்போது 3.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில், பாகிஸ்தானில் ஈத் அல்-அதா கொண்டாட்டங்கள் குறித்து செய்தியாளர் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் இருக்கும் பத்திரிகையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உள்ளூர் மக்களால் சூழப்பட்டிருந்த நிலையில், அவருடைய செய்தி தொடர்பு முடிந்தவுடன், கூட்டத்தில் தனக்கு அருகில் நின்ற வெள்ளை சட்டை அணிந்த ஒரு இளைஞனை, அறைந்தார். ஊடக அறிக்கையின்படி, அவர் தனது தகவல் அறிக்கையை கேமராவுக்குக் கொடுக்கும் போது சிறுவனைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வீடியோவை வெளியிட்ட பெயர் தெரியாத ட்விட்டர் பயணரின் பதிவில், பலரும், நிருபர் ஏன் இளைஞரை அறைந்தார் என்று கேட்டனர். அதற்கு தெரியாது என்று பதிலளித்ததால், பரபரப்பாக வீடியோ வைரலானது.

இந்த சம்பவம் ட்விட்டரில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. சில சமூக ஊடக பயனர்கள் பத்திரிகையாளருக்கு ஆதரவாக ட்வீட் செய்தபோது, ​​​​"சிறுவன் தவறாக நடந்துகொண்டிருக்க வேண்டும்" என்று கூறினர். ஆனால், ஒரு சிலரோ, அந்த நிருபர் செய்தது தவறு என்று கூறிவருகின்றனர்.

இணையத்தில் இண்டஹ் வீட்யோ வைரலாகி வர, அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். ஏன் அந்த நிருபர் அந்த இளைஞரை அறைந்தார் என கேள்விகளை எழுப்பி வர, அதற்கான பதில் வெளியாகி உள்ளது. அங்கிருந்த சிறு பெண்கள் மற்றும் குழந்தைகளை வம்பிழுத்துக் கொண்டிருந்தாராம் அந்த இளைஞன். பல முறை தடுத்தப் பின்னும் நிறுத்தாமல் தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டிருந்ததால், கோபமடைந்த நிருபர் தனது செய்தி அறிக்கை முடித்தவுடன் அந்த இளைஞரை அறைந்திருக்கிறார்.