மிட்டாய் திருடியதாக சிறுவனை கம்பால் அடித்து கடுமையாக துன்புறுத்திய ஊர் பெரியவர்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ....

ராமநாதபுரத்தில் கடையில் மிட்டாய் திருடியதாக பள்ளி மாணவனை ஊர் பெரியவர்கள்  கம்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மிட்டாய்  திருடியதாக சிறுவனை  கம்பால் அடித்து கடுமையாக துன்புறுத்திய ஊர் பெரியவர்கள்... இணையத்தில் வைரலாகும் வீடியோ....

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்த மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த நதியா பானு  என்பவரின் மகன் தாஜுதீன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாஜீதீனுக்கு சில ஆண்டுகளாக சிறிது  மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியிலுள்ள ஒரு கடையில் தாஜீதின் மிட்டாய் திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து, தாஜீதினை கம்பால் அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மிட்டாய் திருடியதற்காக சிறுவனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.