பாஜகவில் இணைந்த மறைந்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத் ...

விஜய் ராவத் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவில் இணைந்த மறைந்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத் ...

மறைந்த ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத் பாஜகவில் இணைந்துள்ளார்.

குன்னூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது சகோதரரான விஜய் ராவத் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் இணைந்ததற்காக தான் பெருமைப்படுவதாகவும், பிரதமர் மோடியின் திட்டங்கள் தொலைநோக்கு பார்வை வாய்ந்தது எனவும் தெரிவித்தார்.