காரை புல் பண்ணும் புல்லர் புலி!!சும்மா தெறிக்கவிடும் வீடியோ...

புலி தனது பற்களால் பம்பரைப் பிடித்துக் கொண்டு காரை பின்னோக்கி இழுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

காரை புல் பண்ணும் புல்லர் புலி!!சும்மா தெறிக்கவிடும்  வீடியோ...

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது பழமொழி. அது உண்மையென்றாலும், புலி, பீரோ புல்லரைப் போல 'புல்' பண்ணும் என்பதை காட்டும் வீடியோ இது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பலரும் பார்த்து மகிழ்கின்றனர்.

பொதுவாக விலங்குகள் வீடியோ என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்த்து இணையத்தில் பகிர்ந்து வருவர். அப்படி மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திராவால் பகிரப்பட்ட இந்த பயமுறுத்தும் வீடியோவில், ஒரு புலி ஒரு காரை கடிப்பதையும், தனது பற்களின் வலிமையால் அதை இழுப்பதையும் காணலாம்.

மேலும், மஹிந்திரா சைலோ எஸ்யூவி காருக்குள் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்திருப்பதையும், புலி தனது பற்களால் பம்பரைப் பிடித்துக் கொண்டு காரை பின்னோக்கி இழுப்பதையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.