நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட கல்லூரி மாணவிகள்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட கல்லூரி மாணவிகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட கல்லூரி மாணவிகள்...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சென்னை அண்ணா நகரில் நேற்று பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் திடீரென்று தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் கல்லூரி மாணவிகள் இருவர் நடுரோட்டில் தாக்கிக்கொள்கின்றனர். இவர்களை அங்கிருக்கும் மாணவர்கள் சிலர் ஒன்ஸ்மோர் என்று கத்திக்கொண்டே வீடியோ எடுக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சண்டையிட்டு கொள்ளும் மாணவிகளை தடுத்து நிறுத்த சென்ற மாணவியை இன்னொரு மாணவி காலால் உதைத்து தாக்குகிறார். பின்னர் சக மாணவிகள் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

முன்பெல்லாம் மாணவர்கள் தான் ஆங்காங்கே அடித்துக்கொண்டும் சண்டையிட்டும் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கே ஈடுகொடுக்கும் வகையில் மாணவிகள் அடித்துக்கொள்கின்றனர்.