தங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட காதல் ஜோடி..! கொஞ்சம் வித்தியாசமாக நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி!! வைரலாகும் வீடியோ

வித்தியாசமான முறையில் தங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்ட காதல் ஜோடி..! கொஞ்சம் வித்தியாசமாக நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி!! வைரலாகும் வீடியோ

ஹாலிவுட் திரையுலகின் ஸ்டண்ட் கலைஞர்களான கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர் இருவரும் படப்பிடிப்பில் ஸ்டண்ட் வேலை செய்யும் போது ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். பின்னர் நாளடைவில் அந்த பழக்கம் இருவருக்குள்ளும் காதலாக மாறி திருமணம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த காதல் ஜோடி தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நிகழ்த்தியுள்ளனர். இது குறித்த வீடியோ முதலில் டிக்டாக்கில் வைரலானதை தொடர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. இதனை காதல் ஜோடியின் திருமண புகைப்படக்காரர் ரஸ் பவல் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், மணமக்கள் தங்கள்  முதுகின் பின்புறம்  தீயை பற்றவைத்து கொண்டு வேகமாக நடந்து வருகின்றனர். அவர்கள் நடந்துவர  விருந்தினர்கள் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கைத்தட்டி கொண்டு இருக்கின்றனர். கொளுந்துவிட்டு எரியும் தீக்கிடையில் இருவரும் ஜாலியாக நடந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் கீழே மண்டியிட்டனர். அப்போது அங்கு தீயை அணைக்கும் கருவியை வைத்திருக்கும் இருவர் ஜோடியின் தீயை அணைக்கின்றனர்.

இப்படி தங்களுக்கு தாங்களே தீவைத்துக்கொண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடியின் வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.