பேண்டில் ஏற்பட்ட சேற்று கறை... கறையை துடைத்த பின்பும் கன்னத்தில் அறைந்த பெண்!!

அடாவடி தனம் பண்ணும் பெண் போலீஸ்...

பேண்டில் ஏற்பட்ட சேற்று கறை... கறையை துடைத்த பின்பும்  கன்னத்தில் அறைந்த  பெண்!!

பேண்டை அழுக்காக்கிய நபரை  துடைக்குமாறு பெண் போலீஸ் கட்டாயபடுத்திய வீடியோ இணையத்தில் தீயாய் பரவுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் ஒருவர் தனது பைக்கில் பின்னோக்கிச் செல்ல முயன்றபோது, பெண் போலீஸ் ஒருவரின் பேண்டில் சேறு கறை ஏற்பட்டு விட்டது. அந்த நபரை பெண் போலீஸ் சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அந்த  6 விநாடி வீடியோவில் அந்த நபர் பெண் போலீஸ் மீது சேற்றை தெளிக்கும் காட்சிகள் இல்லை. அந்த வீடியோவில் அந்த நபர் பெண் போலீசின் பேண்டில் ஏற்பட்ட கறையை சிவப்பு துணி ஒன்றை கொண்டு துடைக்கிறார். அதன்பின் அந்த பெண் போலீஸ் அந்த நபரை அறைந்துவிட்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அந்த வீடியோவில் பெண் போலீஸ் தன் முகத்தை  வெள்ளைத்துணியால் மூடியிருந்ததால் அவரின் முகம் சரிவர தெரியவில்லை. இதனையடுத்து தற்போது அந்த பெண் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சாஷி கலா என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரேவா பகுதியின் எஸ்.பி சிவ குமார், 'நாங்கள் அந்த வீடியோவை பார்த்தோம். இதுகுறித்து யாராவது புகாரளித்தால் அந்த பெண் போலீசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று  தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த பெண் போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.