பேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் பளார் என அறைய பெண்ணை வேலைக்கு அமர்திய நபர் -இணையத்தில் வைரலாகும் பதிவு

ஃபேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் பளார் என அறைய பெண் ஒருவரை வேலைக்கு அமர்திய இந்திய அமெரிக்கரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் பளார் என அறைய பெண்ணை வேலைக்கு அமர்திய நபர் -இணையத்தில் வைரலாகும் பதிவு

ஃபேஸ்புக்கில் மூகியிருப்பதால் இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமின்றி பலரது வாழ்வும் கேள்விக் குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இந்திய அமெரிக்கருமான மனீஷ் சேத்தி என்பவர் தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஃபேஸ்புக் பார்க்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என முடிவெடுத்தார். அதற்காக  தான் ஃபேஸ்புக்கை பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் பளார் என அறைய 8 டாலர்கள் சம்பளத்தில் பெண் ஒருவரை பணியில் அமர்த்தியுள்ளார்.

இதனை மனீஷ் சேத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்கின் கண்ணில் பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் மறு டுவீட் செய்த எலோன் மஸ்க் ஈமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.