சாலையில் இறங்கி வேலை செய்த காவலர்! வைரல் வீடியோ!!

பெங்களூரு மழை தேங்கி இருப்பதைத் தொடர்ந்து, ஒரு காவலர், சாலையில் இறங்கி சுத்தம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

சாலையில் இறங்கி வேலை செய்த காவலர்! வைரல் வீடியோ!!

பெங்களூரில் தொடர்ந்து பெய்யும் மழையால், பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கிறது. பருவ மழை காலத்தில், பல வகையான தொந்தரவுகள் பொது மக்களுக்கு உருவாகியுள்ளது. அதில் மிக முக்கியமான தவிர்க்க முடியாத ஒன்று தான் அடைப்புகள், சாலைகளில் உள்ள சாக்கடைகள் ப்ளாஸ்டிக் போன்ற மட்காத குப்பைகளால் நிரம்பி, அடைக்கப்படுகிறது. 

பெங்களூருவின் எக்கோ வேர்ல்ட் பகுதிக்கு அருகில் தண்ணீர் தேங்கிய சாலையில் ஒரு சாக்கடை அடைப்பாக இருந்தது. அந்த அடைப்புள்ள சாக்கடையை போக்குவரத்து போலீஸ் ஊழியர் ஒருவர் தனது வெறுங்கைகளால் சமீபத்தில் சுத்தம் செய்தார்.

இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ள எச்ஏஎல் விமான நிலைய போக்குவரத்து காவல் நிலையம், "எங்கள் அதிகாரி நாகமணி மற்றும் பீமாஷி ஆகிய அதிகாரிகள், நீர் தேக்கத்தை அகற்றுகிறார்கள்" என்று ட்வீட் செய்துள்ளார். ட்விட்டர் பயனர் ஒருவர், "அது அவருடைய வேலை இல்லை... அவர் தனது கைகளால் சாக்கடையை சுத்தம் செய்ய முடியாது!" என கமெண்ட் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ படு வைரலாகி, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.