தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாதோர் வீட்டிலேயே இருக்கலாம்!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பாத பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என அசாம் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாதோர் வீட்டிலேயே இருக்கலாம்!!

சுப்ரீம் கோர்ட்டில் தடுப்பூசி சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாய படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டது.இந்த வழக்கை தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியானது தடுப்பூசி செலுத்த விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம் என அசாம் முதல் மந்திரி ஹேம்னாத் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. அலுவலகங்கள், உணவகங்களுக்குள் நுழைய முடியாது. தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம். அசாமில் தேவைப்பட்டால் மக்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும்’ என்றார்.