வருங்கால கணவருக்கு அலங்காரம் செய்த மணமகள்.. வைரல் வீடியோ
மணக்கோலத்தில் மணப்பெண் ஒருவர், மணமகனை அலங்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்க்கையில் மிக முக்கிய அங்கீகாரம் பெரும் திருமண நிகழ்வை பலரும் வித்தியாசமான முறையில் கொண்டாட விரும்புவர். இதற்கென அன்றைய தினம் பிரத்யேக அலங்காரத்துடன் உறவினர்கள் சூழ மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் மணமேடைக்கு தயாராகி வருவர்.
ஆனால் வழக்கமான மண நிகழ்வைபோல் அல்லாது புதிதாக வாழ்க்கையில் இணைய இருந்த தம்பதி தங்களுக்கு தாங்களே அலங்காரம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி திருமண உடையில் ஜொலித்த மணப்பெண், எவ்வித சிரமமுமின்றி, தனது இணையான வருங்கால கணவரை அலங்காரம் செய்த வீடியோ தற்போது வைரலாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
View this post on Instagram