விசித்திரமான முறையில் உலக சாதனை படைத்த இளைஞர்!!

அந்தரத்தில் அதிக முறை சுழன்று இளைஞர் ஒருவர் உலக சாதனை...
விசித்திரமான முறையில் உலக சாதனை படைத்த இளைஞர்!!
Published on
Updated on
2 min read

எகிப்தில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் அதிக முறை சுழன்று இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னைடர் என்ற இளைஞர் விசித்திரமான முறையில் உலக சாதனை படைக்க முயன்றுள்ளார்.

இதற்காகவே எகிப்துக்கு சென்ற அவர் விமானம் மூலம் கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 500 அடி உயரம் வரை சென்றுள்ளார். பின் அங்கிருந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து குதித்தார்.

விமானத்திலிருந்து குதித்த அடுத்த நொடியே அந்தரத்தில் சுழல தொடங்கினார். கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 300 அடி வருவதற்குள் ஸ்னைடர் சுமார் 160 முறை சுழன்று உலக சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்த ஸ்னைடர் 5 ஆயிரம் அடி உயரம் இருக்கும் போதே பாராசூட்டை விரித்த அவர் பாதுகாப்பாக கிஸா பிரமிட் அருகே தரையிறங்கினார்.

மேலும், அந்தரத்தில் சுழலும் ஸ்னைடரின் வீடியோ காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com