”அறைகலன்” நான் உருவாக்கிய சொல்...இல்லை என்று குற்றம் சாட்டும் எழுத்தாளர்கள்!

”அறைகலன்” நான் உருவாக்கிய சொல்...இல்லை என்று குற்றம் சாட்டும் எழுத்தாளர்கள்!

”அறைகலன்” சொல் 1963-ஆம் ஆண்டு "ஆட்சித்துறை தமிழ்" எனும் நூலில் வெளியான நிலையில், அந்த சொல்லை தாம் உருவாக்கியதாக எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அறைகலம் வார்த்தை நான் உருவாக்கியது:

அண்மையில், எழுத்தாளர் ஜெயமோகன் அளித்த பேட்டி ஒன்றில், Furniture என்பதற்கு அறைகலன் என்ற சொல்லை தாம் உருவாக்கியதாக தெரிவித்தார். அந்த சொல், தற்போது செய்திதாள்களில் வலம் வருவதாக அவர் கூறினார். ஆனால், 1963-ஆம் ஆண்டு வெளியான ”ஆட்சித்துறை தமிழ்” என்னும் புத்தகத்தின் ஆறாவது பதிப்பிலேயே  இந்த சொல் இடம்பெற்றுள்ளதை, முன்னணி எழுத்தாளர்கள் பலர்  சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். 

இதையும் படிக்க: தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்...!

2002-ஆம் ஆண்டு முதற்பதிப்பாகவும், 2012-ஆம் ஆண்டு மறுபதிப்பாகவும் எழுத்தாளர் அருளி வெளியிட்ட ”அருங்கலைச்சொல் அகரமுதலி” என்ற நூலிலும் இந்த சொல் இடம்பெறிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கேள்வி எழுப்பும் எழுத்தாளர்கள்:

மறைந்து போன பல வார்த்தைகளைத் தான் எழுதிய நூலின் மூலம் புழக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகப் பேசும் எழுத்தாளர் ஜெயமோகனிடம் இரவல் வாங்கும் நிலையிலா தமிழ் தாழ்ந்து போனது? எனவும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், 8 லட்சம் கலைச்சொற்களை ஆவணப்படுத்தி தந்த, “அறிவியில் தமிழின் தந்தை” மணவை முஸ்தபாவையும் முன்னணி எழுத்தாளர்கள் நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளனர்.