ராஜ நாகத்தை அசால்ட்டாக கையில் பிடித்த பெண்

ராஜ நாகத்தை அசால்ட்டாக கையில் பிடித்த பெண்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகத்தை பெண் ஒருவர் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பொதுவாக வீடுகளில், சாலைகளில் கண்டறியப்படும் பாம்புகளை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும், ஆண்களும் அடிப்பார்கள் அல்லது பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பார்கள். எனினும் சில நேரம் ஆண்களே பாம்பை பிடிக்க அஞ்சுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒடிசாவில் பெண் ஒருவர் ராஜ நாகத்தை அசால்ட்டாக பிடித்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மயூர்பஞ்ச் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் ஒன்று  குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட பெண் ஒருவர், அதனை தைரியமாக பிடித்துள்ளார். இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வந்த வனத்துறையினர், பாம்பை பத்திரமாக பிடித்துச் சென்று, வனப்பகுதியில் விட்டனர்.