“நிம்மதியா சாப்பிட விடுங்கய்யா..” கம்பீரமாக நின்று வாகன ஓட்டிகளை பார்த்த காட்டு யானை!

“நிம்மதியா சாப்பிட விடுங்கய்யா..” கம்பீரமாக நின்று வாகன ஓட்டிகளை பார்த்த காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், உதகை அருகே வாகன ஓட்டிகளை வழிமறித்து காட்டு யானை நிற்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார் செல்லும் சாலையில், மரத்தின் கிளைகளை முறித்து இலைகளை காட்டு யானை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்தபடி கம்பீரமாக நின்ற யானை, நிம்மதியாக சாப்பிட விடுங்கய்யா என்கிற ரீதியில் வாகன ஓட்டிகளை பார்த்தபடி அசையாமல் நின்றது. இதனை கண்ட  வாகன ஓட்டி, சாதுரியமாக செயல்பட்டு யானையை கடந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.