கலிகாலம்.. கலிகாலம்.. நூலிழையில் உயிர் தப்பித்த பிறகும் மொபைலில் பேசுவதை நிறுத்தாத பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல்!!

தண்டவாளத்தில் சிக்கி தப்பித்த பிறகும் மொபைலில் பேசுவதை நிறுத்தாத பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கலிகாலம்.. கலிகாலம்.. நூலிழையில் உயிர் தப்பித்த பிறகும் மொபைலில் பேசுவதை நிறுத்தாத பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல்!!

ஐ.பி.எஸ் அதிகாரியான திபான்சு கப்ரா என்பவர் கடந்த 12-ம் தேதி வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை சுமார் ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அதில், செல்போனில் பேசிய படியே வந்த ஒரு பெண் ரயிலில் மோதாமல் தப்பிக்க தண்டவாளத்தில் நேராக படுத்துக் கொள்கிறார்.

பின் ரயில் கடந்து சென்ற பின் தனது வலது கையில் கைப்பையை தொங்கவிட்டபடி அப்பெண் செல்போனில் பேசிய படியே எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் தன்னை கடந்து போனதை கூட பொருட்படுத்தாது இளம் பெண் செல்போனில் மூழ்கிய படி பேசிச் சென்றதன் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.