முகத்தை பார்க்க வேண்டும் மாஸ்க்கை கழற்றுங்கள் என முதல்வரை பார்த்து கூறிய மாணவி....

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வரை முகம் பார்க்க வேண்டும் மாஸ்க்கை கழற்றுங்கள் என்று சொன்ன கல்லூரி மாணவி குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது...

முகத்தை பார்க்க வேண்டும் மாஸ்க்கை கழற்றுங்கள் என முதல்வரை பார்த்து கூறிய மாணவி....

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் ஓசூர் வந்தடைந்தார். இந்நிலையில் இன்று சூளகிரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பின்பு ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அவரின் வருகையை எதிர்நோக்கி ஏராளமான மக்கள் சாலையின் வழிநெடுகிலும் காத்திருந்தனர். அப்போது ஓசூர் தாலுகா ஆபீஸ் சாலையில் காத்திருந்த பொதுமக்களில், ஒரு பெண் முதல்வரை பார்த்து மாஸ்க்கை கழற்றுங்கள் உங்கள் முகத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு காரை நிறுத்த சொன்ன முதல்வர், அனைவரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்று கூறிய பிறகு, அவரது முகத்தை காண்பித்து மாஸ்க் அணிந்தவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.