வாடிக்கையாளர் போல் நடித்து செல்போனை எடுத்து கொண்டு ஓடிய வாலிபர்- சிசிடிவி வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகே செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து புதிய செல்போனை எடுத்து கொண்டு ஓடிய காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.a

வாடிக்கையாளர் போல் நடித்து செல்போனை எடுத்து கொண்டு ஓடிய வாலிபர்- சிசிடிவி வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் செல்போன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வந்த நபர் ஒருவர் செல்போனை தேர்ந்தெடுப்பது போல் நடித்து , கடை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி கண் இமைக்கும் நேரத்தில், கடையில் இருந்த 2 புதிய செல்போன்களை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

சற்றும் எதிர்பார்க்காத செல்போன் கடை பெண் ஊழியர் அந்த இளைஞரை துரத்தி சென்ற நிலையில் கடை வெளியே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு இளைஞருடன் செல்போனை தூக்கி சென்ற வாலிபர் சேர்ந்து பைக்கில் வேகமாக தப்பி சென்றார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை பார்வையிட்டதோடு, அருகிலுள்ள வேறு செல்போன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை சோதித்தனர். அதில் இரண்டு வாலிபர்கள் வந்து செல்வது பதிவாகியுள்ளது. இந்நிலையில் சி சி டி வி கேமரா பதிவுகள் வைத்து வடசேரி போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் திருடிய செல்போனை விற்பனை செய்ய கடைக்கு சென்ற திருடர்கள் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலலின்பேரில் அங்கு சென்ற போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒருவர் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த சேக் பாபு உசைன் (18) மற்றொருவர்  அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த லிஜின் (19) என்பதும் தெரியவந்துள்ளது. இரண்டு வாலிபர்களையும் கைது செய்த வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.