விமானத்தில் திடீரென்று பிடித்த தீ..! பயணிகளின் நிலை என்ன?

சீனாவில் ஓடுபாதையிலிருந்து தடம்புரண்ட விமானம் திடீரென தீப்பிடித்தது. அதிலிருந்த  113 பயணிகள் பத்திரமாக உயிர்தப்பியுள்ளனர்.
விமானத்தில் திடீரென்று பிடித்த தீ..! பயணிகளின் நிலை என்ன?
Published on
Updated on
1 min read

சீனாவின் தென்மேற்கு நகரமான சாங்குயிங்கில் இருந்து திபெத் ஏர்லைன்ஸ் விமானம்  9 விமான ஊழியர்கள் மற்றும் 113 பயணிகளுடன் லஹாசா நோக்கி புறப்பட்டது. விமானம் பயணிகளுடன் தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது, திடீரென ஓடுபாதையை விட்டு விலகி  சத்தத்துடன் தீப்பற்றியது.

இதையடுத்து உஷாரான  விமான ஊழியர்கள், உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகளை வெளியேற்றினர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதில் பயணிகள் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், ஒரு சிலருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும் விமான நிறுவனம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விமானியின் கவனக்குறைவால் இந்த விபத்து நேர்ந்ததா அல்லது வேறு காரணமாக என விசாரணை நடைபெற்று வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com