விமானத்தில் போதை தலைக்கேறியதால் சக பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்ட நபர்...அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

விமானத்தில் போதை தலைக்கேறியதால் சக பயணிகளுடன்  ரகளையில் ஈடுபட்ட நபர்...அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

போதை தலைக்கேறிய பயணி விமானத்தில் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று பெங்களூருக்கு புறப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும் போது போதை தலைக்கேறிய பயணி ஒருவர் குடிபோதையில் சக பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானமானது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட பயணியை மும்பை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.