செல்போனை திருடி செல்லும் முதியவர்- சிசிடிவி வைரல்...

அரியலூரில் செல்போன் கடையில் சார்ஜ் போட்டநிலையில் இருந்த, செல்போனை முதியவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது....

செல்போனை திருடி செல்லும் முதியவர்- சிசிடிவி வைரல்...

அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், மணிகண்டன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த செல்போன் கடையில் ரீ சார்ஜ் மற்றும் உதிரிபாகங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் வெகுதொலைவில் இருந்து கடையை நாடி வருவோரின் செல்போனில் சார்ஜ் இல்லாமல் இருந்தால் அதனை இவருடைய கடையில் இலவசமாக சார்ஜ் செய்வது வழக்கம்.

 அதுபோல் செல்போன் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு கடையில் பணிபுரியும் பெண்ணிடம் கூறிவிட்டு வெளியில் சென்றுள்ளார் கடையின் உரிமையாளர் மணிகண்டன்.

அப்போது செல்போன் கடைக்கு வந்த வயதான முதியவர் ஒருவர், கடையில் பணிபுரியும் பெண்ணிடம் காசு கேட்பது போல் சிறுது நேரம் நின்றுவிட்டு, பின்னர் அங்கு சார்ஜ் போட்ட நிலையில் இருந்த செல்போனை திருடி செல்கிறார்.

அதன்பிறகு கடைக்கு வந்த செல்போனின் உரிமையாளர், சார்ஜ் போட்டநிலையில் இருந்த செல்போன் காணாமல் போனதை கண்டு பதற்றமடைந்து உரிமையாளர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவிக்கிறார். அதன்பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் முதியவர் செல்போனை திருடியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.