பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் சரிவு...! பங்குகளில் நேர்ந்த சதவீத மாற்றம்

பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் சரிவு...! பங்குகளில் நேர்ந்த சதவீத மாற்றம்
Published on
Updated on
1 min read

முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கை 17 ஆண்டுகளுக்கு பிறகு வெகுவாக குறைந்துள்ளது.  கடந்த 2004ம் ஆண்டு முகநூல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் மெட்டா நிறுவனத்துடன் முகநூல் இணைக்கப்பட்டதும், அதன் பயனாளர்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

கடந்த ஆண்டு இறுதியில்,  தினசரி பயனாளர்களில் கிட்டதட்ட 5 லட்சம் பேரை முகநூல் இழந்ததாக கூறப்படுகிறது. அதேசமயத்தில் வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை நிலையாக உள்ளது.

இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றமே காரணம் எனவும் மெட்டா நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்ததால், ஒரே நாளில் மெட்டா நிறுவனத்தின் பங்குகளும் 20 சதவீதம் சரிந்துள்ளன. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com